ஜூலை 6 வரை தடை உத்தரவு நீடிப்பு


பொதுமக்களுக்கான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (22) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை ஜூலை 6ஆம் தேதி தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.