துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் வார்டு 18ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக சி.ஐ.டி.யி அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட அவரை மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.