எரிபொருள் நெருக்கடி; ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விரையும் ஜனாதிபதி!

எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.