நாளைய தினமும் கேஸ் இல்லை


இன்று (09) போன்று நாளையும் (10) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ தெரிவித்துள்ளது. 


நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பலுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 


இதேவேளை, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது.