கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம்.


அனுராதபுரத்தில் 594 எரிவாயு சிலிண்டர்களுடன் சந்தேக நபர்

 ஒருவரை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


இவற்றுள் 540 சிலிண்டர்களில் சமையல் எரிவாயு இருந்தாகவும், 54 சிலிண்டர்கள் வெற்று சிலிண்டர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது