சீமெந்து விலை அதிகரிப்பு?


எதிர்காலத்தில் சீமெந்து விலை  4000 ரூபாவை தாண்டும் என இலங்கை கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.


வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும், வரி அதிகரிப்பினால் தாங்க முடியாத நிலைமை காரணமாக சீமெந்து விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் கூறுகிறார்.