எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வரும் திகதியை அறிவிக்க முடியாது – கஞ்சன விஜேசேகரஎரிபொருள் கப்பல் இலங்கைக்கு வரும் திகதியை அறிவிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.40,000 மெட்ரிக் தொன் எடையுடைய கப்பல் கடந்த 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என அவர் முன்னதாக டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் குறித்த கப்பல் வரவில்லை.

எவ்வாறாயினும், எரிபொருள் கப்பல் வரும் திகதியை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கவில்லை என அவர் நேற்று (25) குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் தற்போது அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் போதியளவு கையிருப்பு இல்லை எனவும், தற்போதுள்ள இருப்புக்கள் பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளித்து விநியோகிக்கப்படுவதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.