ஜொன்ஸ்டனுக்கு பிணை!


கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்னமாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.