குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற இளம் தாய்! அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவம்!


தனது 9 மாத குழந்தைக்கு இளம் தாயொருவர் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று அக்குரஸ்ஸவினை அண்டிய கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தந்தை தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த தருணமே குறித்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும், உயிரிழந்த குழந்தை கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களினால் குறித்த குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ அரச வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு விஷம் கலந்த ஏதேனும் கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயதான குறித்த தாய்க்கு 3 வயதில் இன்னொரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்த குழந்தையின் மரணம் குறித்து திடீர் மரண விசாரணைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது