மின் தடை ஏற்பட்டால் சரி செய்ய போக்குவரத்து வசதியில்லை -இலங்கை மின்சார சபை


-சி.எல்.சிசில்-


நாடு முழுவதும் ஏற்படுகின்ற மின் தடையைச் சரி செய்வதில் மின்சார சபை கடும் நெருக்கடியில் உள்ளது.


எரிபொருள் நெருக்கடி காரணமாக இதற்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.


பராமரிப்புப் பணியாளர்களை திருத்தமுள்ள இடங்களுக்குச் அனுப்ப முடியாததால், பழுதைச் சரிசெய்ய அதிக நேரம் எடுக்கும் என்றும் சபை கூறியுள்ளது.