சமையல் எரிவாயு இன்றும் விநியோகிக்கப்பட மாட்டாது-லிட்ரோ


நாட்டில் தொடர்ச்சியாக 6வது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுக் கப்பலில் இருந்து இதுவரை எரிவாயு விடுவிக்கபடாமையினால் எரிவாயு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில் இதுவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த எரிவாயு கொள்கலன் தொடர்பில் இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த கப்பலில் இருந்து தரையிறக்க முடிந்தாலும், விநியோகிப்பதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக இன்றும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.