ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கபடும் ?


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என சமகி ஐக்கிய தொழிற்சங்கத்தின் அழைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். 


மே 24ஆம் திகதி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். 


எனவே மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பிரகாரம், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, மே மாதம் 24ஆம் திகதி விலையில் திருத்தம் செய்வதற்காக பிரயோகிக்கப்பட்டது. 


“தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மறைந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தியதைப் போன்றது.அது  ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆனால் தற்போதைய சூத்திரத்தின்படி எரிபொருள் விலை உலக சந்தை விலைக்கு ஏற்ப அமலுக்கு வரும்" என்றார்.