கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்



கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இது குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கட்டார் தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன். கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.


இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.