கொழும்பு நகர எல்லைக்குற்பட்ட அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் திங்கட்கிழமைமுதல் மூடல்.


கொழும்பு நகர எல்லைக்குற்பட்ட அனைத்து அரச மற்றும்

 அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் திங்கட்கிழமை (ஜூன் 20) முதல் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க.


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அத்தகைய சவால்களை எதிர்கொள்ளாத அனைத்து கிராமப்புற பள்ளிகளும், அதிபர்களின் விருப்பப்படி வகுப்பில் பாடங்களை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகள் தொடரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இணையவழி பாடங்கள் நடத்தப்படும் பகல் வேளைகளில் மின்சாரம் தடைசெய்ய வேண்டாமென என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திரு.ரணசிங்க தெரிவித்தார்.


ஜூன் 25 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த வாரம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது குறித்து கல்வி அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.