ஜனக ரத்நாயக்கவை விசாரணைக்கு அழைக்கவும்- எரிசக்தி அமைச்சர் கோரிக்கை


எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோப் குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.


ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


நாட்டில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 200 ரூபாவுக்கும் குறைவாக வழங்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.