துவிச்சக்கர வண்டியில் கடமை புரியும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

 




எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், அத்தியாவசிய சேவையிலுள்ள பாதுகாப்புத்தரப்பினர் உட்பட பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும் எரிபொருட்களை தமது அதிகாரத்தைத் திணித்து பெற்றுக்கொள்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இன்று எரிபொருள் பிரச்சினை ஒரு புறமிருக்க தமது கடமையினை துவிச்சக்கர வண்டி மூலம் பெரும்பாலான பொலிஸார் மேற்கொண்டு வருவதனை கல்முனை பிராந்தியத்தில் அவதானிக்க முடிகின்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்வதற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர்.

புகைப்படம்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் காட்சி