புட்டினுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தினேன்... இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கடனுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கடனுதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.


கடந்த கால சவால்களை முறியடிக்க ரஷ்யா வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த கலந்துரையாடலில் ஏரோஃப்ளோட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்