ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானம்.

நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, நுகேகொடையில் உள்ள கட்சியின் தலைமையகக் கூட்டத்தின் பின்னர், தமிழரசுக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும் வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.