முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று அமைச்சுப்பதவிகள்?

 


நாசிக் எம்.எச்.டீ

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில் அதற்கு மூன்று அமைச்சுப்பதவிகளை ஒதுக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.


அதன் பிரகாரம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மிகப்பலமான அமைச்சுப்பதவியொன்றும், அதற்கீடான இரண்டு இராஜாங்க அமைச்சுப்பதவிகளை எச்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு வழங்கவும் ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.


முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்தால் மாத்திரமே சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்குமென்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.   அதன் காரணமாக நிமல் லான்சா ஜனாதிபதியின் சார்பில் இந்த முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.


சர்வ கட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இணைப்பதில் காட்டப்படும் அக்கறை,  ஆர்வம், தீவிரம் என்பன ஐக்கிய மக்கள் சக்தி விடயத்தில் கூட காட்டப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.