விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட பெசில். பயணிகள் அச்சுறுத்தல். பயத்தில் வீடு திரும்பினார்.

 

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது...


கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி வாயிலில் அவர் செல்லும்போது தடுத்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் , அவரை அதில் அனுமதிக்க முடியாதென தெரிவித்துவிட்டனர்.. அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ததால் பெசில் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தார்..


பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார் பெசில்.

பூமுதீன்.