அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இல்லை-சஜித்

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குமுறை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன், காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை வெளியேற்றுவதற்கான முட்டாள் தனமான ஆலோசனைகளை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது யார் என்பது தமக்குத் தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.