காதலிக்காக உயர் அழுத்த மின்கம்பியில் ஏறிய காதலன்!

இன்று (25) காலை கிரிபத்கொட கலா சந்தி பகுதியில் உயர் அழுத்த மின்கம்பியின் மேல் நபர் ஒருவர் ஏறியுள்ளார்.

காதலி வரும் வரை போராட்டம் நடத்துவேன் என்று கூறி உயர் அழுத்த மின்கம்பியின் மேல்ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கிரிபத்கொட மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.