ஜனாதிபதி உயிரோடு இருக்கிறாரா ? பாராளுமன்றில் கேள்வி


ஒரு நாட்டின் ஜனாதிபதி மறைந்திருக்கும் போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நளீன் பண்டார தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று (04) கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி மாளிகையில் இருந்து தனது கடமைகளை நிறைவேற்றும் போது அவரும் பல்வேறு இடங்களுக்குச் செல்வதாகவும் தற்போது நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 


எவ்வாறாயினும், ஜனாதிபதி பல்வேறு இடங்களுக்கு செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதிலும், அவரை அவ்வாறு பார்க்க முடியாது என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.