முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் குழுவொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.


63 பக்கங்கள் கொண்ட புகாரில், இலங்கையின் முன்னாள் அதிபர், பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)