தன் மீதான தாக்குதல் குறித்த Dr. ராஜிதவின் உருக்கமான பதிவு !

 ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது மக்கள் குழுவால், என் மீதான தாக்குதல் காரணமாக, போராட்டம் பற்றி என் அணுகுமுறை ஒரு துளி கூட மாறாது...


இது இலங்கை வரலாற்றில் நடந்தது.


மிகவும் தனித்துவமான அரசியல் போராட்டம்.

சர்வாதிகாரி - ராஜபக்ஷ குடும்ப ஆட்சி,

ஒரு தேர்தல் ஊடாக தோற்கடிப்பதன் மூலம்

முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதை

2015 - 2019 காலகட்டத்தில் நாங்கள் கண்டோம்....


#சர்வாதிகார வெறி கொண்ட,

இந்த மாதிரியான குடும்ப ஆட்சிக்கு 

முடிவுகட்ட  மாபெரும் மக்கள் எழுச்சியொன்றினால் மட்டுமே முடியும்..


இது பற்றி,

உலக அரசியல் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.


பொதுமக்கள் ஆளுக்காள் வித்தியாசமானர்கள். மாற்றமானவர்கள். அவர்கள் விருப்பமான நபர்கள்..

பிடிக்காதவர்கள் மமாறுபட்டவை.


என்னை தாக்கியவர்களின் நோக்கம்

நல்லதொரு நாட்டை உருவாக்குவதா?

மனதுக்குள் கேள்வியெழுப்பிக் கொள்கின்றேன்.


#நான் விலையைக் குறைத்த மருந்து மாத்திரையைக் பயன்படுத்தியவர்கள் அவர்கள்..


#நான் இலவசமாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்த, ஸ்டென்ட்களில் (இருதய இழை) இருந்து உயிரைக் காப்பாற்றிய பெற்றோரின்

குழந்தைகள் அவர்கள்.


#நான் இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்த

காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம்

பார்வையைப் பெற்றவர்களின்

 உறவினர்களே அவர்கள்.


நான், யாரையும் வெறுக்கவில்லை.

உலகில் புனிதமான போராட்டம் என்று எதுவும் இல்லை.

உலகில் புனிதமான இலக்குகள் மட்டுமே உள்ளன.

அந்த புனித இலக்குகளை நோக்கி செல்லும் பயணத்தில், அவமதிக்கப்படலாம்.. தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலம்..

கொல்லப்படுவதற்கும்  கூட

சந்தர்ப்பம் உள்ளது.


ஆனால் இறுதியில் அது எதுவும் முக்கியமில்லை.

 முக்கியமானது என்னவென்றால்

இலக்கு அடையப்பட்டதா? போராட்டம்

வெற்றி பெற்றதா? என்பது மட்டும்தான்..


மக்கள் போராட்டம்,

இப்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் தொங்கியபடி,

பல மைல் தூரத்தை நடந்தே கடந்து ,

அதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

-

டாக்டர் ராஜித சேனாரத்ன