19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம்

 


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் மீனவர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.