எரிபொருள் பெற்றுக் கொள்ள 208 விமானங்கள் இந்தியாவிற்கு


கடந்த 03 மாதங்களில் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைப் பெற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளைப் பெறுவதற்காக 04 விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


அதன்படி கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் தொடரும் விமான எரிபொருள் நெருக்கடி காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உட்பட 208 விமானங்கள் எரிபொருளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.