முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது... அதனை வழங்காவிட்டால் அரசாங்ககத்தை வீழ்த்துவோம் ; முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்


-சி.எல்.சிசில்-


முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


மேலதிக விவாதங்கள் தேவையற்றவை என அதன் தலைவர் குறிப்பிட்டார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு செய்யாவிட்டால் அரசாங்கத்தை தூக்கி எறிந்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.