தானிஷ் அலி உட்பட 4 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

 
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தானிஷ் அலி உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.