ரூ. 40 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இன்று (10) அதிகாலை 03.30 மணியளவில் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த சிகரெட்டுகள் இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இவற்றுள் 50,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கியிருந்ததாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 40 இலட்சம் எனவும் குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.