சீரற்ற காலநிலை ; நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் பலி


நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 93 குடும்பங்கள்  இடம்பெயர்ந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  


நிலைமையை சீர்செய்வதற்காக அரச, உள்ளூராட்சி அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு  ஊழியர்கள் களத்தில் உள்ளனர். 


மேலும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களுடன், தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் விடுமுறை வழங்குவதற்கு பரீசிலனை செய்யபட்டுவருகின்றது.


அதேபோல் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.


இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு, தற்போதைய கள நிலைமை தொடர்பில் தெரிவித்தேன்.  நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்துடன் ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்கள் உடன் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பான  மேலதிக மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.