ஜனாதிபதி ரணிலின் முதல் பயணம் சீனா..?



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அவரது விஜயத்திற்கு முன்னதாக இந்த நாட்களில் எழுந்துள்ள சீனக் கப்பலான ‘யுவான் வான் 5’ தொடர்பான சிக்கல் நிலைமையும் தீர்க்கப்படும் என்றும் அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக, நாட்டில் ஜனாதிபதியானதும் அரச தலைவர் முதலாவதாக அண்டை நாடான இந்தியாவுக்குச் செல்வது பெரும்பாலும் வழமையாக இருக்கும்.


 ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது முதல் விஜயமாக சீனாவை தெரிவு செய்ததின் பின்னணியில் அவர் சர்வதேச சமூகத்திற்கு முக்கிய அரசியல் செய்தியை சொல்ல முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.