ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.


விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,


விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார்.


அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் மேலும் தெரிவித்தார்.


"ரணில் ராஜபக்ஸ" ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார்.