அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது?

அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமானது.

எனினும் தற்போது 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

எனவே, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.