ராஜதந்திர கடவுச்சீட்டில் தாய்லாந்தையடைந்த கோட்டா


ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பெற்றுக் கொண்ட ராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.
இலங்கை - தாய்லாந்திடையேயான உடன்பாட்டின் அடிப்படையில் ராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவர் 90 நாட்கள் அந்நாட்டில் விசா இன்றி தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்து நிரந்தர அரசியல் தஞ்சம் பெறக்கூடிய இடமொன்று தேடப் போவதாகவும் இல்லாத பட்சத்தில் 90 நாட்களுக்குள் நாடு திரும்பக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.