மற்றுமொரு புதிய கூட்டணி விரைவில் அதிரடி தகவலை வெளியிட்ட வாசு.

 


அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக இருந்த 10 கட்சிகள் அடங்கிய குழு எதிர்வரும் இம்மாதம் 21ஆம் திகதி தனது கூட்டணியின் பெயரை வெளியிடவுள்ளது.


நேற்று மாலை பல கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததன் பின்னர் இந்த முடிவை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அறிவித்தார்.


இதேவேளை, நாடு தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை கையாள்வதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கவனம் செலுத்தாதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அதிகாரப் போட்டியை மாத்திரமே தன்னால் அவதானிக்க முடியும் எனவும், அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் தனிநபர்கள் கலந்துரையாடி வருவதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.


நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு நான்கு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


தற்போது கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலைத்திட்டத்திற்கு உடன்படுவதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளை பிரிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொது நிகழ்ச்சி நிரல் இல்லாமல் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிப்பது வீண் என

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை முதலில் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.