சீனாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைய ஆர்வத்தை தெரிவித்தது.



சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில்

வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி உள்ளது.


பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம் இலங்கையின் பெட்ரோலிய சந்தையில் பொருட்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் விநியோகிக்கவும் விருப்பத்தை தெரிவித்துள்ளது.


சினோபெக் நிறுவனத்தின் எண்ணெய் கப்பல் தற்போது ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ளது.


சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதற்கு இலங்கை சந்தையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து சில்லறை வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இலங்கையில் அனுமதி வழங்க எரிசக்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு ஜூன் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதத்தை வழங்குகின்றது, எஞ்சிய 10 வீதமானது லங்கா இந்தியன் ஆயில் கம்பனி (IOC) மூலம் வழங்கப்படுகின்றது.