ஜனாதிபதி கவலை - அனுரகுமாரவுக்கு கடிதம்!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 


சர்வகட்சி வேலைத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்காதது மிகுந்த கவலை அளிப்பதாக ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில், தேசிய மக்கள் சக்தியினர் இணைந்து கொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதியின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.