தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி - ஹரிணி அமரசூரிய

 
தனி நபரின் கொள்கைகளை செயற்படுத்துவதற்காக அல்லது அவற்றை நியாயப்படுத்துவதற்காக சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


"இந்த சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என நாங்க தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளோம். உண்மையிலேயே சர்வகட்சி அரசாங்கம் என்பது ரணில், ராஜபக்ஷ குழுவுடன் அமைத்துக்கொண்ட அரசாங்கமாகும். அவர்கள் முன்வைத்துள்ளதும் அவர்களது கொள்கைகளையாகும். அதனை நியாயப்படுத்துவதற்கா ஏனைய கட்சிகளிடம் ஒத்துழைப்பை கேட்கிறார்கள். தற்போது சர்வகட்சி அமைப்பது காலம் கடந்துவிட்டது. தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி.“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.