விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி விற்பனை பாரியளவில் வீழ்ச்சி


இலங்கையின் உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.


கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவுக்கும்இ சிவப்பு முட்டை 68 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கோழித் தீவனம் மற்றும் புன்னாக்கு ஆகியவற்றின் விலை 15 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வகை கால்நடை தீவனம் 35 ரூபா அதிகரிக்கப்பட்டு 85 ரூபாவான விற்பனை செய்யப்படுகிறது.


இந்தநிலையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தொழில்களை மேற்கொள்வதில் சிரமம் எதிர்நோக்கப்படுவதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க குறிப்பிட்டார்.