பன்டுவஸ்நுவர இலவச கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் பாடாசாலை புத்தகம் வழங்கும் நிகழ்வு.

பன்டுவஸ்நுவர இலவச கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் முஹூசின் ரயீசுத்தீன் எழுதிய இலங்கை அரசியல் முறைமை அரசியல் பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்வு நேற்று (22) குளி/  அஹட்டிமுல்ல முஸ்லிம் மகா வித்தியளய அதிபர் தலைமையில் நடைபெற்றது.

பன்டுவஸ்நுவர இலவச கல்வி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான மொஹம்மட் ரியாதின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன் நிகழ்வில் குருநாகல் மாவட்ட ஜம்இயதுல் உலமா கின்னியம பிராந்திய தலைவரும், மிஸ்பாஹிய்யா,ஹூஸைனிய்யா அரபுக்கல்லூரிகளின் விரிவுரையாளருமான நிஹ்மதுல்லாஹ் மௌலவி, சிலோன் முஸ்லிம் ஊடக பிரதானி ரிம்சி ஜலீல், அஹட்டிமுல்ல பள்ளி தலைவர் நஸார் ஹாஜியார், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.