நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு


நாடாளுமன்றம் கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை ஆரம்பமாகின்றது.

2022ஆம் வருடத்துக்கான 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலம், நாளைய தினம் (09), சபையில் முன்வைக்கப்படும்.

பிரதம அமைச்சரால் இதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன் .நாளை மறுதினம் 10ஆம் திகதி 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலமும் சபையில் சமர்ப்பிக்கப்படும்.