அரசாங்கத்தின் அதிகாரத்தை தக்கவைக்க வேறு வழிகள் தேடுகின்றனர்-சுனில் ஹந்துன்நெத்தி தகவல்!


பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் தேர்தலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரத்தை தக்கவைக்க வேறு வழிகளைத் தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது எனவும், குறுகிய காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.