ரஞ்சனை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் – சஜித்


நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக, ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.