பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக காஞ்சன புகார்


எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


அமைச்சர் தனது புகாரில், CPC மற்றும் CPSTL இன் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை தொடங்குமாறு புலனாய்வு திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எரிபொருள் கொள்வனவு, முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல், ஓடர்கள் வழங்கப்படாமை, சப்ளையர்களைத் தெரிவு செய்தல், கொடுப்பனவுகளில் தாமதம், விநியோக முறைகேடுகள் என தனிநபர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.