மரக்கறி உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பால் மக்கள் பெரும் !பெரும் அசௌகரியத்தில்

 




சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், நாளாந்த நுகர்வுப் பொருட்களான மரக்கறி உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.


எரிவாயு விலை குறைக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்துடன், உணவுப் பொதி ஒன்றின் விலை 10 வீதத்தினால்; குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


200 ரூபாவுக்கு குறைந்த விலைக்கு விற்பனையாகும் உணவுப் பொதியின் விலை குறைக்கப்படமாட்டது.


200 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனையாகும், மரக்கறி, மீன், முட்டை, கோழி உணவுப் பொதியின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறிருப்பினும், மரக்கறி உள்ளிட்ட சில உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாமையால், தேநீர் கோப்பை மற்றும் உணவுப் பொதி என்பனவற்றின் விலையை குறைக்க முடியாது என சில சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.