கொமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற இங்கிலாந்து சென்று தப்பியோடிய இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... கண்டு பிடித்தும் கைது செய்ய முடியாமல் தவிக்கும் இங்கிலாந்து பொலீஸார்.

கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை குழாமில் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக AFP செய்தி சேவை தெரிவித்துள்ளது.


அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.


ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லைl

.


இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்