கோட்டாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு யாருடையது? வெளியான முக்கிய தகவல்

 
கடந்த 13ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களம் முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது.


அதற்கமைய, அவர் தற்போது அவரது தனிப்பட்ட நிதியிலேயே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாகவும், அரசாங்கத்தின் நிதியை அவர் பயன்படுத்தவில்லை எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எனவே, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.