ரணில் சாதனைவீரன் அல்ல - சஜித் பிரேமதாச

 


கொழும்பில் தோல்வியடைந்து வீட்டுக்குச் சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு சாதனைவீரனாவது எப்படி என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான விதம் குறித்து தான் எவ்வித கேள்விகளையும் எழுப்ப போவதில்லை எனவும், அவர் அரசியலமைப்பிற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்டார் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


ராஜபக்சாக்களை தான் பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தால் நானும் இப்போது ஜனாதிபதியாக இருந்திருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.