மரக்கறி விலைகள் பாரிய அளவில் வீழ்ச்சி

 


சி.எல்.சிசில்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய சந்தைககளில் மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


550 முதல் 600 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட போஞ்சி 220-300 ரூபாவுக்கும், வெண்டைக்காய் 100 ரூபாவுக்கும் விற்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கறி மிளகாய், கத்தரிக்காய் தவிர அனைத்துக் காய்கறிகளும் தற்போதைய விலையை விட 50% குறைவாக விற்கப்படுவதாகவும், காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் விற்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலைகள்


கோவா 160 -180

போஞ்சி 220 – 240

லீக்ஸ் 100 – 130

கரட் 220 – 280

பீட்ரூட் 55 – 70

தக்காளி 180-200

முள்ளங்கி 50 – 80

நோகோல் 120 -150

வெள்ளரிக்காய் 50 -70

உருளைக்கிழங்கு 130 -140

பீர்க்கங்காய் 130 -150

வெண்டைக்காய் 40 – 70

புடோல் 160 -180

பாகற்காய் 250 -280

பூசணி 120 – 130

கத்திரிக்காய் 320 – 350

பயற்றங்காய் 90 – 120

சிறகவரை 160 -200

பச்சை மிளகாய் 320-350

கறி மிளகாய் 450 – 500

தக்காளி 160 -220

பெரிய வெங்காயம் 130-140